வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள் மோடிஜி!

பிரதமர் மோடிக்கு ‘செய் அல்லது செத்துமடி’ என்பதான ஆண்டு இது. 2016-ல் பொருளாதார நடவடிக்கைகள் கணிசமாக ஏற்பட்டு கோடிக்கணக்கில் வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்றால் ‘அச்சா தின்’ என்பதை மறந்துவிட வேண்டிய துதான். உயர் வளர்ச்சி வேகம்தான் வேலைவாய்ப்புகளைக் குவிக்கும், இந்தியா போன்ற ஏழை நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்றால் தொழிலாளர்களால் அதிகம் நேரடியாகத் தயாரிக்கப்படும், குறைந்தளவு தொழில்நுட்பம் தேவைப் படும் துறைகளில் வேலை வாய்ப்பு கள் உருவாக வேண்டும். இந்த முறை யில்தான் கிழக்கு ஆசிய, தென் கிழக்கு ஆசிய மற்றும் சீன நாடுகளில் கோடிக்கணக்கான குடும்பங்கள் நடுத் தர வர்க்கமாக முடிந்தது. 60 ஆண்டு களுக்கும் மேலாக இந்தியா இந்தப் பாதையில் பயணப்படத் தவறிவருகிறது.

மோடி தந்த வாக்குறுதி

நரேந்திர மோடியை நாம் தேர்ந் தெடுத்ததற்குக் காரணமே தொழில்துறை உற்பத்தியை நாமும் பெருக்க வேண்டும் என்பதற்காகத்தான்; ஆனால் வேலை வாய்ப்புகள் இதுவரை எதிர்பார்த்தபடி உருவாகவில்லை. 2014 மே மாதம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது மக்க ளிடையே எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருந்தது. நம் நாட்டின் பொருளாதார நிலைமை சரியில்லை என்று பொரு ளாதார அறிஞர்கள் மோடியிடம் அப்போது எச்சரித்தனர். இயல்பாகவே முதலீட்டுச் சக்கரம் 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் எழுச்சி பெறும் என்று தெரி வித்தனர். மோடி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை, எனவே மக்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட முடி யாமல் இருக்கிறார். அன்றே அதை அவர் மக்களிடம் விளக்கியிருந்தால் இந்த அள வுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டிருக்காது.

2 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அடி நிலையிலிருந்து பொருளாதாரம் மீண்ட தென்னவோ உண்மைதான்; ஆனால் வாங்குவதற்குத்தான் மக்களிடம் ஆர்வ மும், பணமும் குறைவாக இருக்கிறது. பெரு நிறுவனங்கள் அதிகக் கடன் சுமை யில் தள்ளாடுவதால் உற்பத்தி குறை வாக இருக்கிறது. எனவே அவை அதிகம் முதலீடு செய்வதோ, புதியவர்களை வேலைக்கு எடுப்பதோ இல்லை. தொழில் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பித் தராததால் வங்கிகளின் நிதி நிலைமை வலுவாக இல்லை. எனவே புதிய முதலீட்டாளர்களுக்குக் கடன் தர முடியாத நிலையில் வங்கிகள் இருக் கின்றன.

புதிய முதலீட்டாளர்களுக்குக் கடன் தந்தால் தான் வேலைவாய்ப் பும் பொருள்களுக்கான தேவையும் அதிக ரிக்கும். மோடி அரசு வாக்களித்தபடி செயல்பட முடியாத படி காலம் கடந்து கொண்டே இருக்கிறது. விரைவில் இரண் டாண்டு முடிக்கப் போகிறது. இனி வரும் காலாண்டிலிருந்து தான் உற்பத்தி வேகம் பெற வேண்டும். பொருளாதார வளர்ச்சி இரண்டிரண்டு சதவீதமாக இனி உயர வேண்டும். அப்படி யிருந்தால்தான் ஆண்டுக்கு 1.2 கோடிப் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

1991-க்குப் பிறகு சீர்திருத்தவாதிகள், ஆசிய நாடுகளைப் போல இந்தியாவிலும் வளர்ச்சியை ஏற்படுத்த கடும் முயற்சி களை மேற்கொண்டனர். சுமார் 800 வகை தயாரிப்புகளை சிறு தொழில்துறை யில் மட்டும்தான் தயாரிக்க வேண்டும் என்று ‘கோட்டா’ அமல் செய்யப்பட்டது. பிற ஆசிய நாடுகள் அவற்றைத் தொழிற் சாலைகளில் குறைந்த செலவில், செய் நேர்த்தியுடன் தயாரித்து உலகச் சந்தை களில் கொண்டுபோய் மலிவாக விற்றன. இதனால் நம்முடைய உற்பத்திக்கு ஏற்று மதிச் சந்தை கிடைக்கவே இல்லை. மோடி தலைமையிலான அரசு இப்போது இந்தச் சிக்கலைத்தான் போக்கும் நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் தொழில்களை விரைவாகவும் எளிதாக வும் தொடங்க நடைமுறைகளை மாற்றிக் கொண்டிருக்கிறது.

தொழிற்சாலைகளில் தொழிலாளர் களை ஆயிரக்கணக்கில் நியமித்து தயாரித்த காலம் மலையேறிவிட்டது. இப்போது பெரும்பாலான தயாரிப்பு நடை முறைகள் இயந்திர மயமாகிவிட்டன. மேலை நாடுகளில் ரோபோக்கள் பயன் படுத்தப்படுகின்றன. விவசாயக் குடும்பங் களிலிருந்து எந்தவிதத் தொழிற்பயிற்சியும் இல்லாமல் வரும் தொழிலாளர்களுக்கு இப்போது தொழிற்சாலைகளில் செய் வதற்கான வேலை எதுவுமில்லை. ஆனால் இதுவும் முழுக்க முழுக்க உண்மையல்ல. உலக அளவில் கடந்த ஆண்டு ஏற்றுமதி யான சரக்குகளின் மொத்த மதிப்பு 18 லட்சம் கோடி டாலர்கள்.

அதில் சீனத்தின் பங்கு மட்டும் 2.3 லட்சம் கோடி டாலர்கள். இந்தியாவும் இதில் கணிசமான பங்கைப் பெறுவதற்கு தொழில் தொடங்குவதற் கான நடைமுறைகளும் சூழலும் எளிமைப் படுத்தப்பட வேண்டும். இப்போதைக்கு திவால் அறிவிப்புக்கான புதிய சட்டம், வணிக வழக்குகளை விசாரித்து உடனடி யாகத் தீர்ப்பு வழங்க தனி நீதிமன்றங்கள், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இவை அனைத்துமே பொது சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற சீர்திருத்தத்துக்குச் சமமானவை.

சேவைத் துறையால் வளர்ச்சி

சேவைத்துறை வளர்ச்சி காரணமாக உயர் வளர்ச்சிப் பொருளாதார நாடாக ஆகியிருக்கிறது. மின் வணிகம் (இ காமர்ஸ்) ஆண்டுதோறும் ஆயிரக்கணக் கான பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. இதே ரீதியில் போனால் 2020-ல் 9,000 கோடி டாலர்கள் மதிப்புக்கு மின் வணிக விற்றுமுதல் இருக்கும் என்றும் ஆன்லைனில் மட்டும் 13 லட்சம் பேர் பொருள்களை விற்பார்கள் என்றும் மதிப் பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மின் வணிக விற்பனையாளரும் 4 நேரடி வேலைவாய்ப்புகளையும் 12 மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கு கிறார். இத்துறையில் 2 கோடிப் பேருக்கு வேலை கிடைக்கிறது. ஆன்லைன் அல்லாத வர்த்தகத்துக்கு இதில் பாதிப்பேர் பதிலியாக இருக்கிறார்கள் என்று கழித்தால்கூட இத்துறையில் மட்டும் ஒரு கோடிப் பேருக்கு வேலை கிடைக்கிறது.

இப்போது புதிய உத்திகளுடன், தொழில் நுட்பங்களுடன் 25 கோடி விற்றுமுதலில் தொழில்தொடங்குவது (ஸ்டார்ட்-அப்) ஊக்குவிப்பு பெற்று வருகிறது. தொழில்நுட்பமும் வணிக மேலாண்மையும் படித்த இளைஞர்கள் வேலைதேடிச் செல்லாமல் புதிய உற்பத்தி, விற்பனை நிறுவனங்களைத் தொடங்கி வருகின்றனர். சுதந்திர இந்தியாவில் இந்த அரசு மட்டும்தான் புதிதாகத் தொழில் தொடங்கும் முனைவோர்களை அங்கீ கரித்துச் சலுகைகளை வழங்கத் தொடங்கி யிருக்கிறது. எதற்கெடுத்தாலும் அரசு அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்கி அனுமதிக்காகக் காத்திராமல் வலைதளம் வாயிலாகவே விண்ணப்பித்து வேலை யைத் தொடர வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது மாநிலங்களிடையே புதிய தொழில் முனைவோர்களை ஈர்க்கும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

வெளியுறவுத் தொடர்பில் மோடி சிறப்பாகச் செயல்பட்டுவிட்டார், இனி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரே சிந்தனை யுடன் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஈடுபட்டால், அவர் உறுதியளித்த ‘அச்சா தின்’ அனைவருக்கும் ஏற்படும்.

AttachmentSize
Read the PDF version of the article979.54 KB

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
CAPTCHA
This is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.